பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை நடைபெறும் கூட்டத்திற்கு கலந்து கொள்ளாதிருக்க ஐக்கிய தேசிய கட்சி எடுத்த முடிவு குறித்து கட்சியின் உப தலைவரான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க விளக்கம் அளித்துள்ளார்.
“ஐக்கிய தேசிய கட்சி சார்பாக மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையில்தான் இருந்தோம். அது பற்றி பேச்சு நடத்துகிற தலமாக நாளை நடக்கும் பிரதமர் உடனான சந்திப்பில் கலந்து கொள்ளவே தீர்மானித்திருந்தோம். ஜனநாயகத்திற்கான அர்ப்பணிப்பாக அந்த தீரமானத்தை எடுத்தோம்.
இருப்பினும் அதற்கான இந்த கூட்டம் அளிக்கப்படவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. 2000ஆம் ஆண்டிலிருந்து நாடாளுமன்றத்தில் இருந்த எம்.பிக்களுக்கும் இவ் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனால் இக்கூட்டம் கொரோனா அல்லது நாடாளுமன்றத்தை மீள அழைப்பது பற்றியது அல்லாமல் வெறும் விருந்தே நடக்கப்போகிறது.
ஜனநாயக நடவடிக்கையை அவர்கள் கேலிக்கு எடுத்துள்ளனர். ஆகவே இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருக்க முடிவு செய்துள்ளோம்’ என்றார்.