மட்டக்களப்பு – வாகரை பிரதேசத்தின் மாங்கேனியில் சிறுதோட்டப் பயிர் செய்கையாளர்கள் தங்களது வழமையான சிறுதோட்டப் பயிர் செய்கையினை கைவிட்டு ஏற்றுமதி பயிரான ‘பிப்பிங்காய்’ பயிர் செய்கையில் அதிகளவு ஈடுபாடு காட்டி வருவதாக தெரிவிக்கினறனர்.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதால் தங்களால் செய்கை பண்ணப்பட்ட கத்தரி, வெண்டி மற்றும் பயிற்றை போன்றவற்றினை சந்தைப்படுத்த முடியாத நிலையில் அவற்றினை கைவிட்டு ‘பிப்பிங்காய்’ செய்கையில் அதிகளவு நாட்டம் செலுத்துவதாக தெரிவிக்கின்றனர்.
அவற்றினை சந்தைப்படுத்துவதிலும் பிரச்சினை இல்லையெனவும் தெரிவிக்கின்றனர். பயிர் செய்கைக்கான நீர்தட்டுப்பாடு நிலவுவதாகவும் நீர்வசதி பெறுவதற்கான வசதிகளை அரச அமைப்புக்கள் ஏற்படுத்தி தருமாறும் கேட்க்கின்றனர்.