காபூலில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு 6 பேர் பலி

281 0

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கு 6 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாதுகாப்பு அதிகாரிகள் சென்ற மினிபஸ் மீது தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் உட்பட 6 பேர் பலியாகினர். 13 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் அதிகாரிகள் சென்ற மினிபஸ் மற்றும் கார் கடுமையாக சேதமடைந்தன. இதனைத் தொடர்ந்து உடனடியாக அந்த இடத்தை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதற்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டதாக அந்நாட்டின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  காபூலில் தற்கொலைப்படையினர் பாதுகாப்பு அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவது இந்த வருடத்தில் இது இரண்டாவது முறையாகும். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 64 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.