சட்டவிரோத குடியேற்றம்: இத்தாலியில் 15 பேர் அதிரடி கைது

316 0

201611162154372370_italy-arrests-15-in-swoop-on-illegal-chinese-immigration_secvpfஇத்தாலியில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சட்டவிரோத குடியேற்றத்தற்கு உதவியதாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் போலி ஆவணங்களுடன் சட்டவிரோதமாக குடியேறும் வெளிநாட்டவர்கள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. குறிப்பாக சீன மக்கள் அதிகம் வசிக்கும் டஸ்கன் நகரில், ஐரோப்பிய யூனியன் அல்லாத வெளிநாட்டவர்கள், குறிப்பாக சீனர்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்து தொழில் செய்வதற்கு தொழிலாளர் ஆலோசனை நிறுவனங்கள் உதவி செய்வதாக குற்றம்சாட்டப்பட்டது.

பிராட்டோ மாகாணத்தில் சுமார் 50 ஆயிரம் சீனர்கள் வேலை செய்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோதமாக குடியேறிய தொழிலாளர்களை சார்ந்து இருக்கும் ஜவுளி நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். இந்த நிறுவனங்கள் எல்லாம், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றும், வரி ஏய்ப்பு செய்வதாகவும் கூறப்படுகிறது.

எனவே, சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அவ்வகையில், இன்று டஸ்கன் நகரில் ‘ஒயிட் காலர்ஸ்’ என்ற பெயரில் 111 இடங்களில் ஒரே சமயத்தில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த அதிரடி சோதனையில் 15 பேர் கைது செய்யப்பட்டதாகவும், பலரிடம் விசாரணை நடைபெறுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்து.

சீன அதிபர் ஜி ஜின்பிங், இத்தாலியின் சர்தினியா தீவுக்கு இன்று வருகை தர உள்ள நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.