மே இரண்டாம் நாளில் முள்ளிவாய்க்கால்..
***** ******
புத்தபெருமானின் புதல்வர்கள் வீசிய
யுத்த பீரங்கிக் குண்டுகளால்
காய்ச்சிய கஞ்சிப்பானைகளும் இன்றோடு
காணாமல் சிதறுண்டு போயிற்று…
எத்தனைநாள் பட்டிணிப் பெருங்காய்ச்சல்….
எலும்பும் தோலுமாய் ஆனது உடல்கள்,
பேரழகாய் இருந்த தோற்றமெல்லாம்
ஏதோபோல் கோலம் மாறிப் போயிற்று…!
நெருப்போ எரிகிறது, அது அடுப்பு நெருப்பல்ல,
எரிவதோ எந்த நெருப்பென்று புரிகிறதா?
எம் இருப்புகள்மீது வந்து விழுந்த
எறிகணை எரிநெருப்பு அது…!
ஐம்பதாயிரம் தாண்டியிருக்கும் இதுவரையான இழப்பு
உண்டு உயிர்பிளைக்கும் எண்ணம் இன்று எவருக்குமில்லை….!
கண்ணில் தென்பட்ட கனவின் உருவம்
புண்பட்டுப் பெருந்துடிப்பில் கிடக்கிறது…!
யார் கண்டார்? யார் கேட்டார்?
மே இரண்டாம் நாளில் முள்ளிவாய்க்கால்.
-வன்னியூர் குரூஸ்-