இஸ்ரேலுக்கான புதிய தூதரை அறிவித்தது துருக்கி

299 0

201611162227527521_president-announces-kemal-okem-as-turkeys-new-ambassador-to_secvpfதுருக்கியின் அதிபர் டய்யீப் எர்டோகன் பிரதமரின் வெளிவிவகார துறையின் ஆலோசகர் கெமல் ஓகெம் என்பவரை இஸ்ரேலுக்கான தூதராக நாங்கள் நியமித்துள்ளோம் என கூறினார்.

இஸ்ரேலின் நேற்றைய நடவடிக்கைக்கு பதில் நடவடிக்கையாக துருக்கியின் அதிபர் டய்யீப் எர்டோகன் இஸ்ரேலுக்கான புதிய தூதரை இன்று அறிவித்துள்ளார்.  இது பற்றி பாகிஸ்தானுக்கு மேற்கொள்ளவிருந்த அதிகாரபூர்வ பயணத்திற்கு முன் தலைநகர் அங்காராவில் நடந்த செய்தியாளர்கள் மாநாட்டில் பேசிய எர்டோகன், எங்களது பிரதமரின் வெளிவிவகார துறையின் ஆலோசகர் கெமல் ஓகெம் என்பவரை இஸ்ரேலுக்கான தூதராக நாங்கள் நியமித்துள்ளோம் என கூறினார்.

இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி நேற்று கூறும்பொழுது, லண்டன் துணை தூதராக உள்ள எய்டன் நயேஹ் அங்காராவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் என கூறினார்.  எனினும், அவர் எப்பொழுது பதவியை ஏற்று கொள்வார் என உடனடியாக அறிவிக்கப்படவில்லை.

கடந்த 2010ம் ஆண்டு காசா பகுதியை சேர்ந்த மவி மர்மரா என்ற கப்பல் பாலஸ்தீன எல்லைக்கு உட்பட்ட இஸ்லாமியர்களின் கட்டுக்குள் உள்ள ஹமாஸ் நகரை நோக்கி சென்றது.  இதனை இஸ்ரேல் படையினர் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டு பின்னர் சோதனை நடத்தினர்.  இந்நடவடிக்கையில், முன்னாள் பாலஸ்தீனியர்களான துருக்கி நாட்டவர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தினால் துருக்கி மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து துருக்கியுடனான உறவை புதுப்பிக்கும் முக்கிய முடிவாக கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு 2 கோடி டாலர் வழங்க இஸ்ரேல் ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில், கியாஸ் ஒப்பந்தங்கள் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் இரு நாடுகளுக்கும் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஆகியவற்றினை கருத்தில் கொண்டு சமரசம் செய்து கொள்வோம் என கடந்த ஜூனில் கூறியிருந்தன.  இந்நிலையில் தூதரக அளவிலான நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது.