கோப்பாயில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

370 0

கோப்பாய், குப்பிளாவத்தையில் கசிப்பு உற்பத்தி செய்யப்படும் இடம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில், 45 லீற்றர் கசிப்பு, 150 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் கோப்பாய், சாவகச்சேரி, வட்டுக்கோட்டை மற்றும் அச்சுவேலி பொலிஸ் பிரிவுகளில் கசிப்பு உற்பத்தி பெரியளவில் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.