சிறிலங்காவின் மேல் மாகாணத்திலும், புத்தளம் மாவட்டத்திலும் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பிரதி பொலிஸ்மா அதிபரி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதனை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்டங்களில் விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது நண்பர்களையோ அல்லது வெளியாட்களையே வீட்டில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டாம் எனவும் அவர் அந்த பிரதேச பொது மக்களை கேட்டுள்ளார்.
இதேவேளை மேல் மாகாணத்தில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் அனைவருக்கும் விசேட அங்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.