யாழ் – கல்லுண்டாய் வெளியில் வாள்வெட்டு – படுகாயத்துடன் வீதியில் கிடந்த ஒருவரை பொலிசார் மீட்பு

308 0

valvedu-2-680x365யாழ்ப்பாணம் – கல்லுண்டாய் வெளிபிரசேத்தில் இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டிற்கு இலக்காகிய நிலையில் வெட்டுக் காயங்களுடன் துடிதுடித்துக் கிடந்த ஒருவரை மானிப்பாய் பொலிசாரால் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – கல்லுண்டாய் வெளிபிரசேத்தில் இன்று இரவு 7.00 மணியளவில் குறித்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கல்லுன்டாய்வெளி பிரதேசத்தில் வெட்டுக்காயத்துடன் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் துடிதுடித்த நிலையில் கிடப்பதைக் கண்டு அப்பகுதியால் சென்ற மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதன் பிரகாரம் மானிப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றதுடன்வெ, ட்டுக்காயங்களுக்கு இலக்கானவரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் விசரணைகளை மானிப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.