கொரோனா அச்சத்தை பயன்படுத்தி சிறையில் சுரங்கம் தோண்டி தப்பிக்க கைதிகள் முயற்சி செய்த சம்பவம் கொலம்பியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக அந்த நாட்டில் உள்ள சிறைகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.அந்த வகையில் கொலம்பியாவின் மெல்டா பிராந்தியத்தில் வில்வாய்சென்சியோ நகரில் உள்ள சிறையில் சிறைக்காவலர்கள் உள்பட 314 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சிறையிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சிறையில் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கைதிகள் சிலர் சிறையில் இருந்து தப்பிக்க திட்டம் தீட்டினர். அதன்படி உள்ளூர் சண்டைகளில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை கொண்டு 7 கைதிகள் தங்கள் சிறை அறையில் சுரங்கம் தோண்ட முயற்சித்தனர். ஆனால் இது குறித்து முன்னரே சிறைக்காவலர்களுக்கு தகவல் கிடைத்ததால் அவர்கள் கைதிகளின் சதி திட்டத்தை தடுத்து நிறுத்தினர்.
இந்த சம்பவம் கொலம்பி யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.