மாவீரர் வாரத்தை (20.11.2016-27.11.2016) முன்னிட்டு தமிழ்த் தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காக களமாடி தம்முயிரை ஈகம் செய்த மாவீரர்களது உன்னத தியாகங்களையும், அவர்களின் அர்ப்பணிப்பையும் பறைசாற்றும் விதமாகவும் யேர்மனியில் பல்வேறு நகரங்களில் தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனியின் ஏற்பாட்டில் மனிதநேய செயற்பாடுகளும், வணக்க நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டது.
எமது மாவீர செல்வங்களை பூசிக்கும் இப்புனித மாதத்தில் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 20.11.2016 அன்று மாவீரர் வாரம் உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி ஞாயிற்றுக்கிழமை 20.11.2016 அன்று Ludwigsburg நகரில் பிற்பகல் 12 மணி தொடக்கம் ஒரு ஓவியப்போட்டி நடாத்தவுள்ளது. திங்கட்கிழமை 21.11.2016 அன்று யேர்மனியில் Essen நகரில் அமைந்திருக்கும் மாவீரர் நினைவுத் தூபிக்கு மாலை 3 மணிக்கு வணக்கம் செலுத்தி , உறுதி எடுக்கப்பட்டு மாவீரர் வாரம் தமிழ் இளையோர்களால் முன்னெடுக்கப்படும் வகையில் அமைகின்றது .
அத்தோடு செவ்வாய்க்கிழமை 22.11.2016 அன்று எசன் நகரில் தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனியின் ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது.இவ்வாறன சமூக சேவையால் எமது இனத்தின் அடையாளம், அன்பு வேற்றின மக்களிடம் எடுத்துச்செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .
குறிப்பிட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டு பங்காற்ற விரும்பும் இளையோர்கள் , யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினருடன் தொடர்புகொள்ளவும் .