யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்(காணொளி)

333 0

municipalயாழ்ப்பாண மாநகரசபை சுகாதார ஊழியர்கள் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் திண்மக்கழிவுகள் அகற்றும் நடவடிக்கைகளை இன்று காலை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று மாலை வடக்க மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உறுதிமொழியை அடுத்து பணிப்புறக்கணிப்பை கைவிட்ட மாநகரசபை சுகாதார ஊழியர்கள் நேற்றிரவே யாழ்ப்பாண மாநகரசபை பேரூந்துத் தரிப்பிடங்களை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று யாழ்.மாநகரசபைக்கு உட்பட்ட சநல பகுதிகளிலும் பைக்கோ மற்றும் வாகனங்களைப் பயன்படுத்தி திண்மக்கழிவுகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.