நல்லாட்சி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றும்-ஜனாதிபதி

329 0

presidentநல்லாட்சி அரசாங்கமானது வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாங்கம் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, நல்லாட்சி அரசாங்கமானது வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று கூறினார்.

யார் என்ன குறைகள் கூறினாலும் நல்லாட்சி அரசாங்கமானது வாக்குறுதிகளை நிறைவேற்றும்.

எவ்வாறான எதிர்ப்புகள் வந்தாலும் எவ்வாறான விமர்சனங்கள் என் மீது முன்வைக்கப்பட்டாலும் நான் என் பணிகளை தொடர்ந்து செய்கின்றேன்.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த எனக்கு உதவிய சுதந்திர கட்சிக்காரர்களை மஹிந்த வேண்டுமென்றே தோற்கடிக்க செய்தார்.

நீ மைத்திரியின் ஆளா அவனை தோற்கடி என்று வெளிப்படையாக கூறினார்.

எவ்வாறெனினும் நல்லாட்சி அரசாங்கத்தை விழாமல் கொண்டு செல்கின்றேன்.

என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ராவய பத்திரிகையின் 30 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை குறித்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் ஆளும் கட்சி, எதிர்கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.