சமூக வலைத்தளத்தில் மிக முக்கிய இடத்தை வகித்து வரும் வாட்ஸ் அப் இன்று முதல் புதிய பரிணாமத்தை பெற்றுக் கொண்டுள்ளது.
இன்று முதல் வட்ஸ் அப் மென்பொருளின் ஊடாக வீடியோ தொழில்நுட்பத்தினுடனான தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் சுகபர்க் தெரிவித்துள்ளார்.
வட்ஸ் அப் வீடியோ தொலைபேசி அழைப்பு உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தனது பேஸ்புக் தளத்தில் அறிவித்துள்ளார்.
தமது வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாகவே தான் இந்த வீடியோ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு பில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ள வட்ஸ்அப் இன்று முதல் புதிய பரிணாமத்தில் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது,