மத்திய வங்கியின் புதிய ஆளுனராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமனம்

569 0

indirajith1-670x445இலங்கையின் மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜிந் குமாரசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் எதிர்வரும் 4ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன முன்னிலையில் பதவியை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநல வாய செயலகததின் முன்னாள் பொருளாதாரதுறை பணிப்பாளராக கடமையாற்றிய இவர் 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி கொழும்பில் தமிழ் குடும்பம் ஒன்றில் பிறந்தார்.
தனது ஆரம்பக்கல்வியை கொழும்பு ரோயல் கல்லூரியிலும் இங்கிலாந்து எரோவ் கல்லூரியிலும் கற்;ற இவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இளமானி பட்டத்தை பெற்றார்.
இதன் பின்னர் தனது கலாநிதி பட்டத்தை சசேக்ஸ் பல்கலைகழகத்தில் பெற்றார்.
பின்னர் 1979ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியில் பொருளாதார ஆராய்ச்சி புள்ளி விபரவியல் மற்றும் வங்கி மேற்பார்வை பிரிவில் அலுவலராக பணியாற்றினார்.
1981ஆம் ஆண்டு தொடக்கம் 1989ஆம் ஆண்டு வரையில் நிதியமைச்சில் கடமையாற்றியுள்ளார்.
இதன்பின்னர் 1990ஆம் ஆண்டு தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரை பொதுநலவாய செயலகத்தில் கடமையாற்றியுள்ளார்.
1971ஆம் ஆண்டு முதல்தர கிரிக்கட் வீரராக திகழ்ந்த இவர் 1972ஆம் ஆண்டில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக கிரிக்கட் அணியிலும் ரக்பி அணியிலும் அங்கத்துவம் பெற்றிருந்தார்.
இந்தநிலையில் 1974ஆம் ஆண்டு இலங்கை ரக்பி அணியின் தலைவராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment