ஜேர்மனியில் மீண்டும் அதிகரிக்கும் கொரொனா – எச்சரிக்கும் அதிபர் ஏஞ்சலோ மெர்கல்

565 0

ஜேர்மனியின் கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் விகிதம் 1 ஆக உயர்ந்துள்ளது என நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான ராபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சராசரியாக, கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இப்போது மற்றொரு நபருக்கு தொற்று ஏற்பட்டு வருவதாக நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான ராபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது ஒரு வாரத்திற்கு முன்பு 0.9 ஆகவும், அதற்கு முந்தைய வாரத்தில் 0.7 ஆகவும் இருந்தது.

R0 எண் என்றும் அழைக்கப்படும் இந்த எண்ணிக்கை 1க்கு மேல் உயர்ந்தால், நாட்டின் சுகாதார அமைப்புக்கு நெருக்கடி அதிகமாகிவிடும் என்று ஜேர்மனி அதிபர் ஏஞ்சலோ மெர்கல் முன்பு எச்சரித்திருந்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.

உடல் ரீதியான சமூக இடைவெளி கட்டுப்பாடுகளை மிக விரைவாக தளர்த்தினால், ஜேர்மனி இதுவரை பெற்றுள்ள முன்னேற்றங்களை இழக்க நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.