வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில் ஐந்து மாணவர்கள் ஒன்பது ஏ

255 0

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகிய நிலையில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில் ஐந்து மாணவர்கள் ஒன்பது ஏ சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் அ.ஜெயஜீவன் தெரிவித்தார்.

வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில் 2019ல் நடைபெற்ற சாதாரண தர பரீட்சையில் 125 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 90 மாணவர்கள் கணித பாடத்துடன் உயர் தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். இதன்படி 72 வீதமாக மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதுடன், கடந்த வருடத்தினை விட இம்முறை 5 வீதமாக சித்தி வீதம் அதிகரித்துள்ளது.

அந்தவகையில் சுதாகரன் சனூர்ஷன், சிறிதரன் கபிஷாந்த், தவராஜா சனுஸ்காந்த், விக்னேஸ்வரன் திருட்ஷிகா, தேவராஜா அஸ்வினித்தா ஆகிய மாணவர்கள் ஒன்பது ஏ சித்தி பெற்றுள்ளனர்.

அத்தோடு சுகுமார் அனுதீஸ், இளங்கோவன் அக்ஷயன், மோகனதாஸ் கஜானந்த், தேவேந்திரன் டினோஜிகா ஆகிய மாணவர்கள் எட்டு ஏ மற்றும் வி சித்தி பெற்றுள்ளதுடன், ஏழு ஏ, இரண்டு வி புள்ளிகளை ஒரு மாணவரும், ஏழு ஏ, ஒரு வி, ஒரு சி புள்ளிகளை ஐந்து மாணவர்களும், ஆறு ஏ, மூன்று வி புள்ளிகளை மூன்று மாணவர்களும், ஆறு ஏ, இரண்டு வி மற்றும் ஒரு சி புள்ளிகளை ஒரு மாணவனும், ஐந்து ஏ, நான்கு வி புள்ளிகளை ஒரு மாணவரும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் அ.ஜெயஜீவன் தெரிவித்தார்.

பாடசாலைக்கும், கல்குடா கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்ந்த மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள் கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக பாடசாலை அதிபர் அ.ஜெயஜீவன் மேலும் தெரிவித்தார்.