30 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை!

288 0

யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து கொழும்புக்குச் சென்று அத்தியாவசிய உணவுப் பொருள்களை ஏற்றிவரும் பாரவூர்களின் சாரதிகள் மற்றும் உதவியாளர்களில் முதல்கட்டமாக 30 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா (பிசிஆர்) பரிசோதனையில் எவருக்கும் காெரோனா தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

நேற்று முன் தினம் (27) பரிசோதனைக்கு பெறப்பட்ட குறித்த 30 நபர்களின் மாதிரியில் தொற்று இல்லை என்பது நேற்று (28) உறுதி செய்யப்பட்டுள்ளது.