கொரோனாவை அரசியலாக்காதீர்கள் – இரவிச்சந்திரன்

268 0
நாட்டில் பரவும் கொரோனா நிலைமையை பயன்படுத்தி கட்சி அரசியல் செய்யாதீர்கள். இது ஒற்றுமையாக செயற்பட வேண்டிய தருணம் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளரும் தமிழ் சமூக ஆர்வலருமான அருட்தந்தை ம.வி.இரவிச்சந்திரன் அடிகளார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று (29) வெளியிட்டுள்ள காணொளி அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இதனைச் சிலர் கட்சி அரசியலாக பார்க்கின்றனர். அரசியல் செய்ய வேண்டிய நேரம் இதுவல்ல. இச்சிறிய நாட்டை கொரோனாவில் இருந்து காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

எனவே இதனை அரசியலாக்கும் செயற்பாட்டை அனைத்து தரப்பினரும் கைவிட வேண்டும். கொரோனாவிற்காக சமூகத்தில் இடைவெளிகளை பேணுமாறு அறிவுறுத்துகிறோம். அந்த இடைவெளி தனியே உடல் ரீதியான இடைவெளியே தவிர அதனால் மாத்திரம் கொரோனாவில் இருந்து விடபட முடியாது.

உள – கொள்கை ரீதியாக ஒருமித்து ஒற்றுமையுடன் கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். சிலர் தமது தனிப்பட்ட கட்சி அரசியலுக்காக பாராட்டு பெறுவதற்கும் இன்னொரு தரப்பை அவமானப்படுத்துவதற்கும் செயற்படுவதை கைவிட்ட ஒற்றுமையாக செயற்பட வேண்டும் – என்றும் அவர் தெரிவித்தார்.