றக்பீ வீரர் வசிம் தாஜுடீனின் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
வசிம் தாஜுடீன் கொலை செய்யப்படுவதற்கு சில மணிநேரத்திற்கு முன்னர் அவரது நண்பர் ஒருவரினால் தாஜுடீனுக்கு தொலைபேசி அழைப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதி சொலிஸ்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
றக்பீ வீரர் வசிம் தாஜுடீனின் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் அநுர சேனாநாயக்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன், நாராஹேன்பிட்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.