கொரோனாவுக்கு 2 லட்சத்து 16 ஆயிரம் பேர் பலி

318 0

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 16 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை குணப்படுத்தும் வகையிலான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இந்த வைரஸ் தாக்கமும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 16 ஆயிரத்தை கடந்தது. தற்போதைய நிலவரப்படி, 31 லட்சத்து 18 ஆயிரத்து 871 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 19 லட்சத்து 55 ஆயிரத்து 460 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 56 ஆயிரத்து 381 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவில் இருந்து 9 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 16 ஆயிரத்து 221 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடுகள்:-
அமெரிக்கா – 58,281
ஸ்பெயின் – 23,822
இத்தாலி – 27,359
பிரான்ஸ் – 23,660
இங்கிலாந்து – 21,678
ஜெர்மனி – 6,215
துருக்கி – 2,992
ஈரான் – 5,877
சீனா – 4,633
பிரேசில் – 4,683
கனடா – 2,852
பெல்ஜியம் – 7,331
நெதர்லாந்து – 4,566
சுவிட்சர்லாந்து – 1,699
அயர்லாந்து – 1,159
ஸ்வீடன் – 2,355
மெக்சிகோ – 1,434