யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 26 மாணவர்கள் 9A சித்தி!

359 0

2019ஆம் ஆண்டிற்கான க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 26 மாணவர்கள் 9 பாடங்களிலும் திறமைச்சித்தி (ஏ) பெற்றுள்ளனர்.

2019 டிசெம்பரில் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 250 மாணவர்கள் தோற்றியிருந்தனர். அவர்கள், 250 பேரும் சித்தியடைந்து, கல்லூரிக்கு 100 வீதம் சித்தியைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

26 மாணவர்கள் 9 ஏ பெற்றுள்ளதுடன், அவர்களில் தமிழ் மொழி மூலம் 12 பேரும் ஆங்கில மொழி மூலம் 14 பேரும் அடங்குகின்றனர்.

29 மாணவர்கள் 8 ஏ பெற்றுள்ளனர். அவர்களில் தமிழ் மொழி மூலம் 13 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 16 மாணவர்களும் அடங்குகின்றனர்.

28 மாணவர்கள் 7 ஏ பெற்றுள்ளனர், அவர்களில் தமிழ் மொழி மூலம் 13 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 15 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர். ஏனைய மாணவர்கள் க.பொ.த. உயர்தரத்துக்கு தகுதி பெற்று சித்தியடைந்துள்ளனர்.