யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதி இறைச்சிக்கடை அருகாமையில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திய குப்பைகள் நேற்று மாலை உள்ளுராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் அகற்றப்பட்டது.
வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எஸ்.குகநாதன் மற்றும் முதலமைச்சரின் செயலாளர் மாநகரசபை உத்தியோகத்தர்கள் இணைந்து உள்ளுராட்சி பிரதேசசபைகளின் வாகனங்கள் மற்றும் தொழிலாளர்களைப் பயன்படுத்தி திண்மக்கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.
திண்மக்கழிவுகள் அகற்றும் போது ஊர்காவற்துறை பிரதேசசபை மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை ஆகியவற்றின் வாகனங்கள் மற்றும் ஆளணிகள் கொண்டுவரப்பட்டு குப்பைகள் அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.
குப்பைகள் அகற்றும் நடவடிக்கையின் போது பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதன் காரணமாக மாநகரசபை சுகாதார ஊழியர்களுக்கும் உள்ளுராட்சி உதவி ஆணையாளருக்குமிடையில் வாக்குவாதங்கள் இடம்பெற்றதைக் காணக்கூடியதாக இருந்தது.