சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 596ஆக அதிகரிப்பு

346 0

சிறிலங்காவில் மேலும் 04 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 596 ஆக  அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 134 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர்  உயிரிழந்துள்ளனர்.

தற்போது 455 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.