கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்த சூலழ் காரணமாக கல்வித்துறையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வடமாகாண முதலாமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
யுத்த சூழ்நிலையினால் கணிதம்,விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் நாட்டைவிட்டு வெளியேறியமையால் இந்த பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் பெருமளவில் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கில கல்வியை போதிப்பதன் ஊடாகவே எதிர்க்காலத்தில் சிறந்த ஒரு சமூதாயத்தை கட்டி எழுப்ப முடியும் எனவும் தெரிவித்தார்.
எனவே வடமாகாணத்தின் கல்வியை கட்டி எழுப்புவதற்கான நடவடிக்கைகளை அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.