சுகாதார அறிவுறைகளை பின்பற்றாத வர்த்தகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

329 0

சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாத வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கு எதிராக இன்றைய தினம் ஹட்டன் டிக்கோயா நகரசபையின் சுகாதார பிரிவினரால் இன்று (28) ம் திகதி சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டன.

இதன் போது சுகாரதார அறிவுறத்தல்களுக்கேற்க முகக்கவசம் அணியாது இருந்தவர்களுக்கு எதிராகவும்,சமூக இடைவெளிகளை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்காத வர்த்தகர்கள், பாதுகாப்பான முறையில் மறிகறிகளை விற்பனை செய்யாத வர்த்தகர்கள் ஆகியர்வர்களை கடுமையாக எச்சரித்ததுடன் கடந்த காலங்களில் எச்சரிக்கப்பட்டு அதனை பொருப்படுத்தாது வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

நாட்டில் அமுலிருந்த ஊரடங்கு சட்டத்தினை தொடர்ந்து இன்று ஒரு சில மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் இன்று (28) காலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்டன.

இவ் ஊரடங்கு சட்டம் இன்று இரவு 8.00 மணிக்கு மீண்டு அமுல் படுத்தப்பட்டு காலை 5.00 மணிவரை இடம்பெறும் எனவும் இந்நடைமுறை எதிர்வரும் 04 திகதி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் அமுலில் இருக்கும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்றைய தினம் ஊரடங்கு சட்டம் தளரத்தப்பட்டதனை தொடர்ந்து மலையக நகரங்களில் வர்த்தக நடவடிக்கை வழமைபோல் இடம்பெற்றன.

மலையக நகரங்கள் வழமை போன்று மக்கள் வருகை தந்திருந்ததுடன் ஊரடங்கு சட்டம் தளரத்தப்பட்ட ஏனைய நாட்கள் போன்று இன்றைய தினம் அதிகமான வருகை தந்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.