சீருடைகள் தைக்கும் பணி நடைபெறவில்லை- அமைச்சர் செங்கோட்டையன்

279 0

கொரோனா வைரஸ் தொற்று தற்போது உள்ளதால் சீருடைகள் தைக்கும் பணி நடைபெறவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வரும் கல்வியாண்டில் 50 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளது. அதேபோல 35 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். தற்போது கொரோனா வைரஸ் தொற்று உள்ளதால் சீருடைகள் தைக்கும் பணி நடைபெறவில்லை. பள்ளிகள் திறந்து ஒரு மாதம் கழித்து மாணவர்களுக்கான சீருடைகள் வழங்கப்படும். மாணவர்களுக்கான காலணிகள் தயாராக உள்ளன. ஆசிரியர், ஆசிரியைகள், தன்னார்வலர்கள் கொரோனா தடுப்பு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வசதி படைத்தவர்கள் ஏழை, எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற பொருள் உதவிகளை செய்யலாம். அவ்வாறு செய்பவர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி அல்லது வருவாய்த்துறை ஆகியவற்றில் ஏதாவது ஒரு துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு பொருள் உதவிகளை வழங்கலாம். அவ்வாறு பொருட்கள் வழங்கும்போது கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.