மொசூல் நகரின் முக்கிய பகுதிகள் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்பு

293 0

201611160441309600_a-third-of-east-mosul-recaptured-from-is-spokesman_secvpfமொசூல் நகரின் கிழக்கு பகுதியில் முக்கிய இடங்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் 2014-ம் ஆண்டு பல பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற நாட்டை தன்னிச்சையாக உருவாக்கினார்கள்.

ஈராக் நாட்டின் 2-வது பெரிய நகரமான மொசூல் நகரத்தை ஐ.எஸ். அமைப்பினரின் பிடியில் இருந்து மீட்பதற்காக, அந்த நாட்டின் படைகள் சண்டையிட்டு வருகின்றன. இந்த சண்டையினால் அந்த நகரத்தை சேர்ந்த சுமார் 47 ஆயிரம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில், மொசூல் நகரின் கிழக்கு பகுதியில் மூன்றில் ஒரு பங்கு ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 17-ம் தேதி முதல் ஈராக் படைகள் இந்த மீட்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. மொசூல் நகரின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் ஈராக் படைகள் முன்னேறி வருகிறது.

இதில் மொசூல் நகரின் கிழக்குப் பகுதியில் முதன்முறையாக ஈராக் படைகள் முன்னேறி உள்ளது. மேலும் அங்கு பல்வேறு பகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.