காங்கிரஸ் செய்த துரோகம்தான் கறுப்பு பணம் பதுக்கல்

292 0

201611151358481328_congress-is-infidelity-hoarding-black-money-says-pon_secvpfகாங்கிரஸ் செய்த துரோகம்தான் இந்த கறுப்பு பண பதுக்கல் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. நாளைய தினம் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இந்த பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

புதிய 500 ரூபாய் நோட்டு கிடைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் அருண்ஜெட்லியும் தெரிவித்து உள்ளனர்.தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் சொல்வதைப் போல் கருப்பு பண ஒழிப்பு குறித்து முன் அறிவிப்பு கொடுத்துவிட்டு நடவடிக்கை எடுத்து இருக்கலாம் என்று கூறுவது சரியல்ல. அது கருப்பு பண முதலாளிகள் ஆதாயம் பெற வழிவகுத்து இருக்கும்.

காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உணர்ச்சி வசப்பட்டு பேசக்கூடாது. அவர் பிரதமர் மோடியை உணர்ச்சி வசப்பட்டு பேசுவது சரியல்ல.காங்கிரஸ் செய்த துரோகம்தான் இந்த கருப்பு பண பதுக்கல். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு காங்கிரஸ் செய்த துரோகத்தை சரி செய்யவே பிரதமர் மோடி இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.