காஷ்மீர்: தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை – போலீஸ்காரர் பலி

285 0

201611160926240624_policeman-killed-in-encounter-with-militants-in-baramulla_secvpfஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடைபெற்றுவரும் துப்பாக்கிச் சண்டையில் ஒரு போலீஸ்காரர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்துக்குட்பட்ட சோபோர் பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, அந்தப் பகுதியை பாதுகாப்பு படையினர் நேற்று பின்னிரவு சுற்றிவளைத்தனர்.

இதை அறிந்ததும் அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் அவர்கள்மீது துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  இந்த தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் வீரமரணம் அடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.