கரும்புச் செய்கைக்கு இனந்தெரியாதோரால் தீ வைப்பு

389 0

திருகோணமலை கந்தளாய் சீனித்தொழிற்சாலைக்குரிய விதை நாற்றுப் பண்ணையில் நான்கு ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட கரும்புச் செய்கைக்கு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் இன்று (26) பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் சீனித்தொறிற்சாலையை அண்டிய பகுதியில் எம்.சி.சுகர்ஸ் லங்கா நிறுவனத்தினால் கரும்பு விதைகள் நடப்பட்ட நான்கு ஏக்கர் கரும்புச் செய்கைக்கு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாகவும், தீயினை இராணுவத்தினர்  பொலிஸார், பாதுகாப்பு படையினர் மற்றும் தொழிலாளர்களின் உதவியுடன் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும்  அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தற்றுபோது சீனித்தொழிச்சாலை இயங்காது தூர்ந்து போயுள்ளதால் கரும்புகளை அரைக்கவும் முடியாது, கொண்டு செல்லவும் முடியாது, நட்டத்தினை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

தொழிற்சாலையை இயங்கச் செய்ய நடவடிக்கைகள் எடுக்குமாறும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.