சீனாவில் இருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட் பெக்கெட்டுகளுடன் சீனப் பிரஜைகள் நால்வரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள், செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை 5.40க்கு, கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 32 இலட்சம் ரூபாய் பெறுமதியான 410 சிகரெட் பெக்கெட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நால்வரில் இரண்டு பெண்களும் அடங்குவதாக தெரியவருகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.