சிறிலங்கா சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி

421 0

சிறிலங்கா சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றுகின்ற பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உணவு பெற்றுக் கொள்ளும் வீட்டில், இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் திணைக்களத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அத்துடன், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதற்கமைய, குறித்த அதிகாரிக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு சட்டமா அதிபரினால் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.