மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே என குறிப்பிட்டுள்ளார்.மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இதற்கிடையே, இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இந்த போரை மக்களும் நிர்வாகமும் இணைந்து நடத்துகின்றன. இந்த போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே.
சுகாதாரப் பணியாளர்களின் பணி போற்றப்படுகிறது. உலக நாடுகளுக்கு தேவையான உதவிகளை இந்தியா செய்து வருகிறது என தெரிவித்துள்ளார்.