சீனாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

257 0

சீனாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று பல உலக நாடுகளில் பரவியுள்ளது. எனினும், வுகானில் ஊரடங்கை அமல்படுத்தி பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஊரடங்கு தளர்வும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சீனாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் ஹிலோங்ஜியாங் மாகாணத்தில் உள்ளூர் அளவில் ஒருவருக்கு பரவி உள்ளது. மீதி 11 பேரும் வெளிநாட்டு பயண தொடர்பு உடையவர்கள் என தெரிய வந்துள்ளது.
கடந்த 10 தினங்களாக ஒருவர் கூட சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் உயிரிழக்கவில்லை. அதே நேரத்தில் 89 பேர் கொரோனாவுக்கு எதிரான சிகிச்சையில் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர். கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தோர் எண்ணிக்கையும் 49-ல் இருந்து 8 ஆக குறைந்தது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 82 ஆயிரத்து 800-ஐ கடந்துள்ளது. கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 632 ஆக உள்ளது.