முழு ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடி காணப்படும் சென்னை சாலைகள்

309 0

முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக இன்று காலை சென்னையில் உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

கொரோனா நோய் தொற்று சென்னையில் தீவிரமாகி வருவதையடுத்து இன்று முதல் 4 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் தவிர வேற எந்த கடைகளும் திறந்திருக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக இன்று காலை சென்னையில் உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
சென்னை கோயம்பேடு பாலம், கிண்டி கத்திப்பாரா மேம்பாலம், அண்ணா சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது