வட தமிழீழம் மயிலங்காடு பகுதியில் எரிந்த நிலையில் சடலம்!

307 0

ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இன்று அதிகாலை சிறிலங்கா காவல் துறையால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

மயிலங்காடு பகுதியில் வீதியோரமாக எரிந்த நிலையில் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.ஆண் ஒருவரின் சடலம் ஒன்றே இனம் காணப்பட்டுள்ளது.குறித்த நபர் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

மேலும் இந்த சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் சிறிலங்கா காவல் துறையால் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.