அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க பூரண ஒத்துழைப்பு – ஜேர்மன்

284 0

1479225336_download-1இலங்கையின் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க ஜேர்மன் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

அண்மையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் ஜேர்மன் நாட்டின் உயர்ஸ்தானிகர் ஜோன் ரோட் உடனான சந்திப்பினை அடுத்தே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் உயர்ஸ்தானிகருடன் அமைச்சர் கலந்துரையாடினார்.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த ஜேர்மன் நாட்டு உயர்ஸ்தானிகர் இந்த திட்டத்திற்கு ஜேர்மன் அரசினூடாக தொழில்நுட்ப உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் இதுதொடர்பில் மேலும் விரிவாக கலந்துரையாட இரு தரப்பினர் எதிர்பார்த்துள்ளதாகவும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.