ஆவா குழு இராணுவத்தினால் வழிநடத்தப்படும் குழு அல்ல – ருவான் விஜயவர்த்தன

336 0

colruvan183309404_4848274_07102016_sskஆவா குழு இராணுவத்தினால் வழிநடத்தப்படும் குழு அல்ல என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஆவா போன்ற குழுவை கொண்டு நடத்துவதற்கான எந்தவொரு தேவையும் இராணுவத்துக்குக் கிடையாது என்ற அமைச்சர் ராஜித சேனாரட்னவின் கூற்று உண்மையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான மூன்றாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள ஆவா குழுவைச் சேர்ந்த மூவரில் ஒருவர் இராணுவ உத்தியோகத்தராக பணியாற்றியுள்ளார்.

தமிழ் இனத்தவரான அவர் தற்போது இராணுவத்தில் இருந்து விலகிவிட்டதாக விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

குறித்தவொரு காலத்துக்கு இராணுவத்தில் பணியாற்றி விலகியதன் பின்னர் இந்த குழுவுடன் இணைந்து செயற்பட்டுள்ளார்.

அவ்வாறு இராணுவத்தில் இருந்த உத்தியோகத்தர்கள் சில நேரங்களில் இந்த குழுவினருடன் இணைந்து செயற்பட்டிருக்கலாம். அது தொடர்பில் இன்னும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டார்.