சிறிலங்காவில் மேலும் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்காரணமாக மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்ட 15 பேரில் ஏழு நபர்கள் கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
ஒருவர் கொழும்பு, பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 12 வயது சிறுவன் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், நான்கு பேர் வெலிசறை கடற்படை முகாமை சேர்ந்தவர்கள் என்பதுடன், மற்றுமொருவர் மொனராகலை வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.