தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஆபத்தானது

285 0

அசாதாரண சூழ்நிலையால் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஆபத்தானது என கெபே (CaFFE) அமைப்பு தெரிவித்துள்ளது.

தபால் மூல விண்ணப்பங்கள் பலரின் கைகளின் ஊடாக பறிமாற்றப்படுவதாகவும் அவ்வாறு பறிமாற்றம் இடம்பெறும் போது ஒருவருக்காவது கொரோனா தொற்று இருக்க கூடும் எனவும் அவரின் மூலம் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 27 ஆம் திகதிக்குள் அனைத்து அரசு அலுவலகங்களும் மீண்டும் இயங்கும் என எதிர்பார்க்க முடியாது எனவும் கெபே அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏனெனில் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய அரசாங்க அதிகாரிகளுக்கு அது நடைமுறை சிக்கலை ஏற்படுத்தும் எனவும் கெபே கூறியுள்ளது.

இந்த விடயங்களை கருத்திற்கொண்டு தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை தொடர்பிலும் சுகாதார நிலைமை தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு கெபே அமைப்பு தேர்தல்கள் ஆணையாளரை கடிதம் மூலம் கோரியுள்ளது.