செந்துரன் நீரில் மூழ்கியே மரணித்தார்; மரண விசாரணையில் தகவல்

292 0

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இ.செந்தூரன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்றும் அவரது உடலில் அடிகாயங்கள் எவையும் இல்லை எனவும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் செந்தூரன், நேற்று (24) மாலை முதல் காணாமற்போன நிலையில் தொண்டமனாறு கடலில் இன்று (25) அதிகாலை அவரது சடலம் கண்டறியப்பட்டது.