ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் லெதன்டி தோட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கைது சம்பவம் (25) சனிகிழமை பிற்பகல் வேளையில் இடம்பெற்றதாக சிறிலங்கா பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது தேயிலை மலையில் வைத்து விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு கால் அளவை கொண்ட 200 மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த மதுபான போத்தல்கள் அதிகவிலையில் விற்கபட்டதாக தெரிவித்த ஹட்டன் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.