சிறிலங்காவில் ஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்பு வெளியானது !

292 0

சிறிலங்காவின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு மே மாதம் 4 திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளில் வழமை போன்று எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு மீண்டும் 08 மணிக்கு அமுலாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில்  சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக நாடளாவிய ரீதியில் மீண்டும் ஊரடங்கு சட்டத்தினை நீடிக்குமாறு தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

குறிப்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் கோரிக்கைக்கு அமைய நாடளாவிய ரீதியில் ஊரங்கு சட்டத்தினை நீடிக்குமாறு வலியுத்தப்பட்டது.

எனினும் கொழும்பு, கம்பஹா களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளிலேயே ஊரடங்கு உத்தரவு மே மாதம் 4 திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.