ஏ.டி.எம் இல் பணம் எடுக்கும் போது – வரி அறவீடு செய்யப்படாது

280 0

ravi-640x400ஏ.டி.எம். ஊடாக பணம் எடுக்கும் போது வாடிக்கையாளர்களிடமிருந்து 5 ரூபா புதிய வரி அறவீடு செய்யப்படாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான வரி வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து அறவீடு செய்யப்படாது.

நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளினால் மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்களின் போது 5 ரூபா வரி அறவீடு செய்யப்பட உள்ளது.

இதன்படி, வங்கியின் வாடிக்கையாளர்கள் தானியங்கி டெல்லர் இயந்திரங்களின் ஊடாக பணம் எடுக்கும் போது புதிதாக 5 ரூபா வரி அறவீடு செய்யப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.