பாகிஸ்தானுக்கு கொரோனா சிகிச்சைக்கான வெண்டிலேட்டரை வழங்குவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
வெண்டிலேட்டர் (செயற்கை சுவாச கருவி) தேவைப்படும் உலக தலைவர்களுடன் நான் பேசினேன். அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய அமெரிக்கா உதவும் என்று கூறினேன். அந்த வகையில், பாகிஸ்தானுக்கு வெண்டிலேட்டர் அனுப்பி வைப்போம்.
ஸ்பெயின், இத்தாலி, மெக்சிகோ, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் வெண்டிலேட்டர்கள் அனுப்பி வைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தானுக்கு வெண்டிலேட்டர் இலவசமாக கொடுக்கப்படுகிறதா? அல்லது விலைக்கு அளிக்கப்படுகிறதா? என்று அவர் எதுவும் கூறவில்லை.