பொது மக்கள் மீது மேலதிக வரிகள் சுமத்தப்பட்டுள்ளன – ஜீ.எல்.பீரிஸ்

278 0

g-l_-peiris_1பொது மக்கள் மீது மேலதிக வரிகள் சுமத்தப்பட்டுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் பொதுமக்களுக்கு மேலதிக வரியை சுமத்தியுள்ளது.

நீர்க் கட்டணப் பட்டியலில் காணப்படும் 50 ரூபா நிலையான கட்டணம் 250 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது ஐந்து மடங்கான விலை உயர்வாகும்.

கடந்த வரவு செலவுத் திட்டத்தைப் போன்றே இந்த வரவு செலவுத் திட்டத்திலும் பல்வேறு குளறுபடிகள் காணப்படுகின்றன.

கடந்த வரவு செலவுத்திட்டத்தின் யோசனைகள் மாதத்திற்கு மாதம் வாபஸ் பெற்றுக் கொள்ளும் வகையிலும், திருத்தங்கள் செய்யும் வகையிலும் அமைந்திருந்தன.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் தற்பொழுதே அந்த நிலைமை ஆரம்பமாகியுள்ளது.

பாரியளவிலான கள்வர்களிடமிருந்து வரி அறவீடு செய்யமாமல் ஏன் அப்பாவி பொதுமக்கள் மீது வரிச் சுமை திணிக்கப்படுகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கம் திட்டமிட்ட வகையில் பொதுமக்களிடம் வரியை கூடுதலாக அறவீடு செய்து வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.