கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கும் முறை இன்று தொடங்கியது.கொரோனா பாதித்த நோயாளிகளை குணப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை பெரிதும் உதவியாக உள்ளது.
டெல்லியில் ஒரு நோயாளிக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் குணம் அடைந்து வீடு திரும்பினார். பிளாஸ்மா சிகிச்சை என்பது கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவரின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு உடலில் செலுத்தும் முறை தான் பிளாஸ்மா சிகிச்சைமுறை என்று அழைக்கப்படுகிறது.
கர்நாடகா மாநிலத்தில் பிளாஸ்மா சிகிச்சைக்கு மத்திய அரசு அனுமதி அளித்து விட்டதாக அம்மாநில மருத்துவ கல்வி மந்திரி சுதாகர் தெரிவித்தார்.
மேலும் கொரோனா சிகிச்சையில் இருந்து மீண்டு சென்றவர்கள் பிளாஸ்மாவை தானமாக கொடுக்க ஏராளமானோர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் மந்திரி சுதாகர் கூறினார்.
இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கும் முறை இன்று தொடங்கியது.