பொலிஸ் கண்காணிப்பு வாகனம் மீது துப்பாக்கி சூடு – ஒருவர் பலி, இருவர் படுகாயம்

302 0

80019cff5dad453d7681dd6ea7ab44c869eகுருநாகல் மாபோத பகுதியில் பொலிஸ் கண்காணிப்பு வாகனம் மீது இனம் தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.