ஊரடங்கு சட்ட நேரத்தில் சீவல் தொழிலாளர்களினால் சேகரிக்கப்படும் பதநீரை போத்தலில் அடைப்பதற்கான வேலைத்திட்டங்கள் மிக விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம், பனை அபிவிருத்தி சபை மற்றும் கலால் திணைக்களம், சுகாதார பரிசோதகர்களுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
கலந்துரையாடலின் முடிவில் சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன குறிப்பாக சீவல் தொழிலாளர்கள் ஊரடங்கு நேரத்தில் அவர்களால்சேகரிக்கப்படும்ப் பதநீரை விற்பனை செய்ய முடியாதவாறு அரசாங்கத்தினால் சகல தவறணைகளும் மூடப்பட வேண்டும் என்ற நிலை காணப்படுகின்றது.
சீவல் தொழிலாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக இன்றைய தினம் குறித்த கூட்டம் இடம் பெற்றிருந்தது ஊரடங்குச்சட்டம் நீக்கப்படும் வரை சீவல் தொழிலாளர்களால் சேகரிக்கப்படும் பதநீர் அந்தந்த பிரதேசங்களில் உள்ள சங்கங்கள் பெற்று அவர்கள் அதனை போத்தலில் அடைக்கவுள்ளதோடு அத்தோடு மிகுதி பதநீரை மதுசார தயாரிபுக்காக கலால் திணைக்களத்தினரிடம் ஒப்படைத்ததாகவும் தீர்மானிக்கப்பட்டது.
ஊரடங்கு வேளையில் பதநீர் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்குரிய அனுமதிகள் தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது குறித்த அனுமதிகள் குறித்த வரையறையுடன் மேற்கொள்ளப்படும் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.